இலங்கை துறைமுகத்துக்குள் சீன ஆராய்ச்சி கப்பல்கள் நுழைய ஒரு ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பல்வேறு கப்பல்கள் வந்துள்ளன.
அவற்றில் பலவற்றை ஆராய்ச்சி கப்பல்கள் என்று சீனா கூறினாலும், 750 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களை துல்லியமாக கண்காணிக்கும் உளவு கப்பல்களாக இருக்கலாம் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை கடற்பரப்பில் மற்றொரு அறிவியல் ஆராய்ச்சி கப்பலான சியாஸ் யாஸ் ஹாஸ்-3 என்ற கப்பலை இம்மாதம் நிறுத்துவதற்காக சீனா அனுமதி கோரியது.
அதற்கு அனுமதி வழங்க இலங்கை மறுத்துள்ளது. இலங்கை அதிபர் விக்கிரமசிங்கே தம்மை சந்தித்த போது இந்தியாவின் பாதுகாப்பு விஷயங்களை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதன் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.